fbpx

#Rain: வரும் 21- ம் தேதி வரை இந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும்…! வானிலை மையம் அறிவிப்பு….!

தமிழகத்தில் வரும் 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்), தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இன்று கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

வாரத்தில் 4 நாட்கள் வேலை.. சம்பள முறையில் மாற்றம்.. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..

Mon Jul 18 , 2022
மத்திய அரசு 29 தொழிலாளர் சட்டங்களை இணைத்து 4 ஊதியக் குறியீடுகளை தயாரித்துள்ளது… அதாவது ஊதிய குறியீடு, தொழில்துறை உறவுகள் குறியீடு, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சமூக பாதுகாப்பு குறியீடு ஆகியவை ஆகும்.. கடந்த 2019-ம் ஆண்டில் தொழில்துறை உறவுகள், வேலையின் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் வேலை நிலைமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய மூன்று தொழிலாளர் குறியீடுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த புதிய ஊதிய குறியீட்டின் படி, […]

You May Like