fbpx

Mettur Dam..!! ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!!

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சர் முக.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையால், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டில், மே 24ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தாண்டு எப்போது தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சர் முக.ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார். 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம், 103 அடிக்கு மேல் உள்ளது. நீர் இருப்பு 69.82 ஆக இருக்கிறது. அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 850 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. உரிய காலத்தில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் உழவுப் பணிக்கு ஆயத்தமாகின்றனர்.

Chella

Next Post

4வது காலாண்டில் மொயில் மூலம் 4.02 லட்சம் டன் மாங்கனீசு தாது உற்பத்தி...! மத்திய அரசு தகவல்...!

Tue May 30 , 2023
இந்திய மாங்கனீஸ் தாது நிறுவனம் மொயில் -ன் இயக்குநர்கள் குழு, மார்ச் 31, 2023 அன்று முடிவடைந்த நான்காவது காலாண்டு மற்றும் நிதியாண்டுக்கான நிதி முடிவுகளை அங்கீகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 4.02 லட்சம் டன் மாங்கனீஸ் தாதுவை உற்பத்தி செய்து, 7% வளர்ச்சியை நிறுவனம் எட்டியுள்ளது. நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டாவது மிக உயர்ந்த உற்பத்தியை நிறுவனம் பதிவு செய்தது. இந்த ஆண்டில் மாங்கனீஸ் […]

You May Like