காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 23,989 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பு கருதி கடந்த சில நாட்களாக உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையின் உபரி நீர்வரத்து காரணமாக மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 21,520 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 23,989 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 50.03 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 3.23 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 17.83 டி.எம்.சி-யாக உள்ளது.
Read More : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய அதிமுக நிர்வாகி..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி..!!