இளமைக் காலத்தில் நாடக நடிகராக இருந்து பின் திரைத்துறையில் கால்பதித்த எம்ஜிஆர், அதிலும் உச்சம் தொட்டார். திரைத்துறையில் இருந்தபோதே மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் கால் பதித்த அவர், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக பின்னாளில் உருவாகினார். அண்ணாவின் மறைவிற்கு பின் திமுகவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட கருத்து மோதலினால் அதிலிருந்து நீக்கப்பட்டு பின் அதிமுக எனும் கட்சியை தொடங்கினார்.
மக்களின் செல்வாக்கினால் தமிழக முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் வாழ்வில் யாரும் வெல்ல முடியாத சரித்திர நாயகனாகவும் திகழ்ந்தார். திரைத்துறை, அரசியல் இரண்டிலும் அவரின் புகழ் உச்சத்திலே இருந்தது. 1977 முதல் இறக்கும் வரை 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்துள்ளார்.
எம்ஜிஆரின் பூர்வீக வீடு கேரளாவில் உள்ள பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்நிலையில், அவரது வீடு சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. அங்கு எம்.ஜி.ஆரின் தாய், தந்தையரின் அழகிய புகைப்படங்களும் உள்ளது. இதோ உங்களுக்காக அந்த புகைப்படம்.
Read more ; Holiday | நாளை மொஹரம் பண்டிகையொட்டி தமிழகத்தில் பொது விடுமுறை..!!