fbpx

1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.. ஆனால் அதிகமானோரை பணியமர்த்த திட்டம்..

மைக்ரோசாப்ட் நிறுவனம் பல்வேறு பிராந்தியங்களில் 1800 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

ஜூன் 30 -ம் தேதியுடன் அந்நிறுவனத்தின் நிதியாண்டு முடிவடைந்த நிலையில், நிறுவனத்தின் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.. எனினும் நடப்பு நிதியாண்டில், அதிக எண்ணிக்கையில் புதிய ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.. எல்லா நிறுவனங்களையும் போலவே, நாங்கள் எங்கள் வணிக முன்னுரிமைகளை ஒரு வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்து, அதற்கேற்ப கட்டமைப்பு மாற்றங்களைச் செய்கிறோம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் மைக்ரோசாப்டின் மொத்த பணியாளர்களில் 1.8 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே பணிநீக்கங்கள் உள்ளன.

பணிநீக்கங்கள் இருந்தபோதிலும், தங்கள் வணிகத்தில் முதலீடு செய்து, வரும் ஆண்டில் புதிதாக பணியமர்த்துவோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் மேலும் கூறியது. அதாவது இந்த ஆண்டு அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது..

உலகெங்கிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆலோசனை, வாடிக்கையாளர் மற்றும் கூட்டாளர் தீர்வுகள் உட்பட பல்வேறு குழுக்களில் பணி நீக்கம் பரவியுள்ளன. அந்த வகையில், மற்றொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், 2022 ஆம் ஆண்டு முழுவதும் பணியமர்த்துவதை மெதுவாக்கும் என்று கூறியது.

மெட்டா நிறுவனம் அதன் வருவாய் இலக்குகளை அடையத் தவறியதால், இதேபோன்ற பணிநீக்க நடவடிக்கைகளை அறிவித்தது.. மேலும் Snapchat இன் தாய் நிறுவனமான Snap, பணியமர்த்தல் செயல்முறையை மெதுவாக்குவதாக அறிவித்தது. கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனமும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் சில ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

Maha

Next Post

வங்கி வேலை தேடும் நபர்களா நீங்க…? ICICI வங்கியில் 12-ம் வகுப்பு முடித்த நபர்களுக்கு பணி...! உடனே விண்ணப்பிக்கவும்….!

Thu Jul 14 , 2022
ICICI வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Data Entry Operator பணிகளுக்கு என 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12-ம் வகுப்பிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இந்த Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் […]
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!! இனி இதற்கும் கட்டணம்..!! இன்று முதல் அமல்..!!

You May Like