ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து முதல்வர் ஜெகன்மோகன் கூறுகையில், “மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம், குடிநீர் சாலை வசதி உள்ளிட்டவை உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும், சீரான நிலை அடையும் வரை அரசு அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.