தமிழகத்தில் பால் விலை உயர்ந்துள்ள நிலையில், டீ – காஃபி விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 ரூபாய் உயர்ந்து 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், டீ-காஃபி தலா 2-3 விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 4-5 முறை டீ, காஃபி குடிப்பவர்கள் ஏராளம். இந்நிலையில், இந்த விலை உயர்வு சில இடங்களில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமிழகமெங்கும் அமலாகும் என்று கூறப்படுகிறது.