fbpx

பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்.. மீண்டும் பால் விலை உயர்வு.. பிரபல நிறுவனம் அறிவிப்பு..

அமுல் நிறுவனம் மீண்டும் பால் விலையை உயர்த்தி உள்ளது..

இந்தியாவின் மிகப்பெரிய பால் விநோயக நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம் பால் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது.. அமுல் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. அமுல் பாலின் அனைத்து வகைகளுக்கும் மாற்றியமைக்கப்பட்ட விலைகள் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது, அமுல் தாசா ஒரு லிட்டர் விலை ரூ.54 எனவும், அமுல் கோல்டு விலை ரூ.66; அமுல் பசும்பால் ரூ.56, அமுல் ஏ2 எருமைப்பால் ரூ.170 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த செலவினங்களின் அதிகரிப்பு விலை காரணமாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கால்நடைத் தீவனச் செலவு உட்பட கால்நடைகள் தொடர்பான செலவு 20% அதிகரித்துள்ளது என்றும், இது அமுலின் உள்ளீட்டுச் செலவில் கணிசமான அதிகரிப்பை உருவாக்கியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த அக்டோபர் மாதம் அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது. இதை தொடர்ந்து மதர் டெய்ரி நிறுவனமும் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

புதுக்கோட்டையில் 16 வயது சிறுமி கற்பம்….! பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மேலும் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது….!

Fri Feb 3 , 2023
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக மத்திய அரசு கடந்த 2012 ஆம் வருடம் protection of children from sexual offence act 2012 எனப்படும் போக்சோ சட்டத்தை கடந்த 2012 ஆம் வருடம் நிறைவேற்றியது. அதாவது, கடந்த 2012 ஆம் வருடம் தலைநகர டெல்லியில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி நள்ளிரவில் பேருந்தில் 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு […]

You May Like