fbpx

தலை சுற்றவைக்கும் ஆம்னி பேருந்து கட்டணம்!… தீபாவளி செலவுகளை கணக்கிட்டு டென்ஷன் ஆகும் நெட்டிசன்கள்!

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சென்னை போன்ற நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவர். ஆனால், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் தாறுமாறாக உயர்ந்திருந்ததாக அடிக்கடி புகார் எழுந்தது. இதனை குறைக்கும் வகையில் கட்டணம் தொடர்பாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 5% கூடுதலாக குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அதன்படி, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் நிலவரம்: சென்னை – திருச்சி; குறைந்தபட்சம் ரூ.1325 ஆகவும், அதிகபட்சம் ரூ.1841 ஆகவும் நிர்ணயம். சென்னை – மதுரை; குறைந்தபட்சம் ரூ.1688 ஆகவும், அதிகபட்சம் ரூ.2554 ஆகவும் நிர்ணயம். சென்னை – சேலம்; குறைந்தபட்சம் ரூ.1363 ஆகவும், அதிகபட்சம் ரூ.1895 ஆகவும் நிர்ணயம். சென்னை – கோயம்புத்தூர்; குறைந்தபட்சம் ரூ.1725 ஆகவும், அதிகபட்சம் ரூ.2874 ஆகவும் நிர்ணயம். சென்னை – திருநெல்வேலி; குறைந்தபட்சம் ரூ.1960 ஆகவும், அதிகபட்சம் ரூ.3268 ஆகவும் நிர்ணயம். சென்னை – நாகர்கோவில்; குறைந்தபட்சம் ரூ.2211 ஆகவும், அதிகபட்சம் ரூ.3765 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை-தென்காசிக்கு குறைந்தபட்சமாக ரூ.1975, அதிகபட்சமாக ரூ.3,292ம், சென்னை-விருதநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.1,756, அதிகபட்சமாக ரூ.2,926, சென்னை-தேனி குறைந்தபட்சமாக ரூ.1,630, அதிகபட்சமாக ரூ.2,717 என டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஈரோடுக்கு குறைந்தபட்சமாக ரூ.1,276, அதிகபட்சமாக ரூ.2,127 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர சென்னை – தஞ்சாவூருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.1,097, அதிகபட்சமாக ரூ.2,665, சென்னை -நாகப்பட்டினத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.972, அதிகபட்சமாக ரூ.1,620, சென்னை -சிதம்பரத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.690, அதிகபட்சமாக ரூ.1,150 , சென்னை-பாண்டிச்சேரிக்கு குறைந்தபட்சமாக ரூ.502, அதிகபட்சமாக ரூ.836 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும்சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு ரூ.4154, விசாகப்பட்டினத்துக்கு ரூ.4,258 ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த குறைந்தபட்ச கட்டணத்தை கணக்கிட்டு, நான்கு பேர் கொண்ட குடும்பம் சென்னையில் இருந்து மதுரைக்கு போய் வர வேண்டும் என்றால் பேருந்து கட்டணம் மட்டும் 10000 ரூபாயும், வரும் போது 10 ஆயிரம் ரூபாயும் எடுத்து வைக்க வேண்டியிருக்கும். ஊருக்கு போய் தீபாவளி செலவு செய்யும் தொகையை சேர்த்தால் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். இதுக்கு ஊருக்கு போகாமல் சென்னையிலேயே இருக்கலாம் என்று நொந்து போய் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Kokila

Next Post

TNSTC: வரும் நவம்பர் 13-ம் தேதி முதல் ஓட்டுனர், நடத்துனர் பணிகளுக்கு ஹால்டிக்கெட்....! ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்...!

Sun Oct 29 , 2023
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு நவம்பர் 19-ஆம் தேதி எழுத்து தோ்வு நடைபெறவுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நேரடி நியமனம் மூலம் ஓட்டுனர், நடத்துனர்கள் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இப்பணிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கு தமிழகம் முழுவதும் 10 மையங்களில், வரும் நவம்பர் 19-ம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது. இதற்கான […]

You May Like