fbpx

ஒட்டுநர், நடத்துனர் இருக்கை தவிர்த்து… மினி பேருந்தில் 25 இருக்கைகள் இருக்க வேண்டும்…!

மினி பேருந்திற்கான புதிய விரிவான திட்டம் பொது மக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள்/ குக்கிராமங்கள்/குடியிருப்புகளில் உள்ள போக்குவரத்து வசதியற்ற மக்களுக்கு, போக்குவரத்து வசதி ஏற்படுத்த அந்த பகுதி எந்த பாதையாலும் இணைக்கப்படாமல் இருந்தால், இணைப்பை ஏற்படுத்தி உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த சாலைப் போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:- அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீ ஆக இருக்க வேண்டும். குறைந்த பட்ச சேவை செய்யப்படாத ( Minimum Un-served Route Length) பாதையின் நீளம் சாலையின் மொத்த பாதையின் நீளத்தில் 65% குறைவாக இருக்க கூடாது. தொடக்கப்புள்ளி / முனையப்புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு/ கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்கவேண்டும். புள்ளிகளில் ஒன்று பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடமாக இருக்க வேண்டும்.

முனையப்புள்ளியில் இருந்து அடுத்த 1 கி.மீ தூரத்தில் அரசு மருத்துவமனை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, இரயில் நிலையம், உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை சந்தை, ஆட்சியர் அலவலகம், தாலூக்கா அலுவலகம், புகழ் பெற்ற வழிபாட்டு தலங்கள் அல்லது பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பு உள்ள இடம் மற்றும் வழங்கப்பட்ட பாதை அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட பாதை நீளத்தை விட அதிகமாக இருக்கும். பின்னர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்ற பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து அதாவது. போக்குவரத்து கழகம். உள்ளாட்சி அமைப்புக்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலங்கள் போன்றவை மேற்கூறிய தேவைப்படும் இடங்களில் பயணிகள் பயனடையும் வகையில் சேவை பகுதியல் 1 கி.மீ வரை கூடுதல தூரத்தை அனுமதிக்கலாம். மேற்கூறிய இடங்களை தவிர மற்ற இடங்களுக்கு இது பொருந்தாது.

பழைய மினிப்பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளார்கள் இப்புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு எழுத்துபூர்வமாக விருப்பத்தினை அளித்து பழைய அனுமதிச்சீட்டினை ஒப்படைக்க வேண்டும். இப்புதிய திட்டத்தில் குறைந்தபட்சம் 1.5 கி.மீ கூடுதல் சேவை செய்யப்படாத பாதையாக இருக்க வேண்டும். மினிப்பேருந்து இருக்கைகள் ஒட்டுநர் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து 25 ஆக இருக்க வேண்டும். மேலும் மினிப்பேருந்தின் Wheel Base 390 cm க்கு மிகாமல் இருக்க வேண்டும். நிலைப்பேருந்து அல்லது மினிப்பேருந்துகள் 4 நடைகளுக்கு குறைவாக இயக்கப்படும் பகுதிகள் சேவை செய்யப்படாத பாதையாக கருதப்படும்.

English Summary

Mini buses must have 25 seats, excluding the driver’s and conductor’s seats.

Vignesh

Next Post

நேபாளத்தில் 23 இந்தியர்கள் கைது!. என்ன காரணம்?. அண்டை நாடுகளுக்கிடையே அதிகரிக்கும் பதற்றம்!.

Tue Feb 11 , 2025
23 Indians arrested in Nepal!. What is the reason?. Increasing tension between neighboring countries!.

You May Like