fbpx

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கல்லூரி கட்டிய அமைச்சர் எ.வ.வேலு..!! ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி நிர்வகிக்கும் அறக்கட்டளை அரசு நிலத்தை ஆக்கிரமித்து பொறியியல் கல்லூரி கட்டியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி மனுதாரருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலையை சேர்ந்த டி.எஸ். சங்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மாத்தூரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா தலைவராக உள்ள திருவண்ணாமலை சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை ஆக்கிரமித்து, பொறியியல் கல்லூரி கட்டியுள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமித்த நிலத்திற்கு பட்டா வாங்கி கல்லூரி தொடங்க அனுமதி பெற்றுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் அதிகாரம் கொண்டவர் என்பதால் அரசு நிலத்தை வாங்கி அதில் கல்லூரி கட்டியுள்ளதாக கூறியுள்ளார். எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜி.உமா மகேஸ்வரி ஆஜரானார். இதையடுத்து, புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Chella

Next Post

”விடுங்க அண்ணா.. ஸ்கூலுக்கு போகணும்”..!! பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து பாலியல் பலாத்காரம்..!!

Fri Nov 17 , 2023
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே ஒரு கிராமத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பல்வேறு மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பகுதிகளில் போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு நடந்தும், சைக்கிளிலும் தான் சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல 8ஆம் வகுப்பு மாணவி பள்ளிக்கு தனியாக சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென பள்ளி மாணவியிடம் […]

You May Like