fbpx

வீட்டுமனை முறைகேடு வழக்கு.. அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராக உத்தரவு..!!

வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில் குற்றச்சாட்டு பதிவிற்காக அமைச்சர் ஐ.பெரியசாமியை செப்.30ல் ஆஜராக வேண்டும் என எம்.பி, எம்.எல்.ஏ களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவு ; ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார்.

2008ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் உட்பட சிலருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டு மனைகளை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக, அப்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை, கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அதில், ஐ. பெரியசாமிக்கு எதிரான வழக்கை தவிர மற்ற அனைவரும் மீதான வழக்கை ரத்து செய்த வழக்கில் இருந்து விடுவித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னையில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.

ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகவில்லை அவரது தரப்பில் ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று நீதிபதி உத்தரவிட்டார், வழக்கின் குற்றச்சாட்டு பதிவிற்காக ஐ.பெரியசாமி வரும் 30ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகவில்லை என்பதால் தொடர்ந்து 9 ஆவது முறையாக குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more ; உடல் எடையை அசால்ட்டாக குறைக்கும் மாங்காய் ஜூஸ்..!! இப்படி செய்து குடிச்சிப் பாருங்க..!!

English Summary

Minister I Periyaswamy to file charges in housing plot allotment case
The Chennai Special Court has ordered Periyaswamy to appear on the 30th.

Next Post

குடும்ப வன்முறையில் இருந்து தப்பிக்க வேண்டுமா..? பெண்களே இத கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Fri Sep 13 , 2024
Do you want to escape from domestic violence? Girls must know this..!!

You May Like