fbpx

திருநங்கைகளுக்கு ஆவின் கடை நடத்தி அனுமதி… விண்ணப்பங்கள் வரவேற்பு…!

திருநங்கைகளுக்கு ஆவின் கடை நடத்தி அனுமதி கொடுத்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; பால் கொள்முதலில் தமிழ்நாடு 36 லட்சம் லிட்டரை கடந்துள்ளது. விவசாயிகளுக்கு ரூ.3 ஊக்கத்தொகையாகவும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது 9% குறைக்கப்பட்டு ரூ.125 கோடி வழங்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகள் வாங்குவது எளிதாகியுள்ளது. வட்டியில்லா கடன் வழங்கல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் பால் உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஆவினில் பால் கையாளும் திறன் 70 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும் பால் விற்பனை 28% அதிகரித்துள்ளது.

அமுல் நிறுவனம் உள்ளே வருவது விவாதத்திற்கான பொருளே இல்லை, உலகமயமாக்கலுக்கு பின் நம்முடைய பொருளை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம். பால் கொள்முதலில் பிரச்னை இருக்காது, தேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் ஆவின் கிளைகளை அதிகரிக்க தேவை உள்ளது. ஆவின் நிர்வாகம் பெரிய முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றார்.

கிடாரி கன்றுகளை ஈனும் சினை ஊசி ஆரோக்கியமான பழக்கம் என நான் சொல்ல மாட்டேன். மேலை நாடுகளில் ஒரு மாடு 32 லிட்டர் பால் தரும் நிலையில், நமது நாட்டு மாடுகள் 5-6 லிட்டர் தருகிறது. இதை 10-15 லிட்டராக உயர்த்தினால் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். அதற்காக தான் நாட்டு இனங்களை கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகள், வேலை இல்லாதவர்கள், திருநங்கைகளுக்கு ஆவின் கடை நடத்தி அனுமதி கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் ஆவின் நிர்வாகத்தின் கிளைகள் அதிகரிக்க தேவை உள்ளது. விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கூறினார்.

English Summary

Minister Mano Thangaraj has said that he is giving permission to run a shop for transgenders.

Vignesh

Next Post

சவுக்கு சங்கர் மீது துடைப்பம் வீசிய வழக்கு..!! சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!!

Mon Jul 1 , 2024
A petition has been filed in the Madras High Court seeking a judicial inquiry into the issue of whipping Shankar.

You May Like