அடுத்த ஷாக்!… ரேவண்ணா மனைவிக்கும் தொடர்பு!… விரைவில் கைதாகிறார்?… முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி!

Revanna Wife: பெண் கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் அவரது மனைவி பவானிக்கும் தொடர்பு இருப்பதாகவும் விரைவில் அவரும் கைது செய்யப்படவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக ஹாசன் தொகுதி மத சார்பற்ற ஜனதா தள எம்.பியும், இத்தேர்தலில் ஹாசன் தொகுதியின் பாஜ – மஜத கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பலாத்காரம் செய்து எடுத்த வீடியோக்கள் பரவி, தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே பிரஜ்வல் மட்டுமின்றி அவரது தந்தை ரேவண்ணா மீதும் முன்னாள் பணிப்பெண் ஹோலேநரசிப்புரா போலீசில் பாலியல் புகார் செய்தார்.

அதாவது, பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸ் விசாரணைக்கு அனுப்பாமல் கடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு, 10 நாள் சிறைவாசத்துக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதேபோல் நேற்று பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ரேவண்ணாவின் மனைவி பவானிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் அவரும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Readmore: தலித் தலைவரின் பிரதமர் கனவை சிதைத்த, இந்தியாவின் முதல் பாலியல் ஊழல்..!!

Kokila

Next Post

வாகன ஓட்டிகளே... நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறை...! சிக்கினால் ரூ.25,000 வரை அபராதம்...!

Sat Jun 1 , 2024
18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் விதிக்கும் விதிகள் அமலுக்கு வந்தது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் புதிய ஓட்டுநர் உரிம விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் எளிதில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், புகை வெளியீடு விதிகளை கடுமையாக்கி, அதிக புகையை வெளியிடும் 9 லட்சம் பழைய அரசு […]

You May Like