fbpx

ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசமா…? அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய தகவல்…! முழு விவரம் உள்ளே…

மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ், மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். முதல் 100 யூனிட்டை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்த மாதம் 31-ம் தேதி வரை மின் இணைப்புதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை சிறப்பு முகாம்களிலோ அல்லது அந்தந்த மின் கோட்டை வாரிய அலுவலகங்களிலோ தங்களது மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம். மேலும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய அந்தப் பணியானது நடைபெறாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அடி தூள்...! 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இது கட்டாயம்...! அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Fri Dec 16 , 2022
பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறளைச் சேர்க்க தமிழக அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஜே .சத்யநாராயண பிரசாத் ஆகியோர் திருக்குறள் அறிவு, ஞானம் மற்றும் நடைமுறை வழிகாட்டுதலின் விலைமதிப்பற்ற ஆதாரமாக உள்ளது. “காலமற்ற செய்திகள் மற்றும் நவீன காலத்திற்கு பொருத்தமானதன் காரணமாக […]

You May Like