fbpx

மீண்டும் ஆஞ்சியோகிராம்! அடிக்கடி கால்கள் மரத்துப் போகின்றன..!அமைச்சர் செந்தில் பாலாஜி.. பரபரப்பு தகவல்கள்.!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றம் அவரது காவலை நவம்பர் 22ஆம் தேதி வரை நீட்டித்தது.

கடந்த சில தினங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சைகள் பலனளிக்காததால் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதனைத் தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு ஒரு மணி நேரம் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

தற்போது அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ஓமந்தூர் அரசு பள்ளநோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். அங்கு மூலையில் உள்ள நரம்பில் ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து நெஞ்சு வலி இருப்பதாகவும் தெரிவித்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் அடிக்கடி கால்கள் மரத்துப் போகின்றன என்று கூறியதால் இதய பாதிப்பு இருக்கலாம் என கருதி ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து பார்க்க மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Kathir

Next Post

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்..? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை..!! ஏன் தெரியுமா..?

Thu Nov 16 , 2023
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். அதன்படி, 10ஆம் வகுப்பிற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 முதல் 29 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறவுள்ளது. 11ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 19 முதல் 24ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. 12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 12 முதல் 17 ஆம் தேதி வரை செய்முறைத் […]

You May Like