fbpx

லிஃப்டுக்குள் சிக்கித் தவித்த அமைச்சர் சிவசங்கர்..!! ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென லிஃப்ட் பழுதானதால், அமைச்சர் சிவசங்கர் லிஃப்டுக்குள் மாட்டிக் கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிருக்கு சுய உதவி குழுக்கள் மூலம் கடன் தள்ளுபடி செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று வருகை தந்தார். அப்போது, மேல் தளத்திற்கு செல்வதற்காக லிஃப்டில் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், திடீரென்று லிஃப்ட் பழுதாகி இருக்கிறது. கிட்டத்தட்ட சுமார் 15 நிமிடங்கள் வரை லிஃப்டில் சிக்கியதாக தெரிகிறது.

லிஃப்டுக்குள் சிக்கித் தவித்த அமைச்சர் சிவசங்கர்..!! ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

இதனையடுத்து, தகவறிந்த ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் லிஃப்ட் பழுது பார்க்கும் நபர்களை வரவழைத்து சரிசெய்தனர். பின்னர் அமைச்சர் சிவசங்கர் பத்திரமாக வெளியே வந்தார். இந்த சம்பவத்தினால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது.

Chella

Next Post

குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த நபரை பழி தீர்த்த மனைவியின் அண்ணன்கள்…!

Thu Jan 5 , 2023
குடி என்ற அரக்கனால் தமிழகத்தில் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று வருகின்றனர். இந்த குடியை ஒழிப்பதற்கு இதுவரையில் மத்திய, மாநில அரசுகள் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கடம்பங்குடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல் சென்ற ஜூன் மாதம் இவருடைய குடும்பத்தில் உண்டான தகராறு காரணமாக தன்னுடைய மனைவியை அடித்து கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி […]

You May Like