fbpx

இயக்குனர் விக்ரமனின் வீட்டிற்கு 15 பேருடன் திடீரென சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!! என்ன காரணம்..?

இயக்குநர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையாக உள்ளார். இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரை 15 சிறப்பு மருத்துவர்களுடன் விக்ரமனின் இல்லத்தில் சந்தித்து சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையின் தவறான அறுவை சிகிச்சையால், கடந்த 5 ஆண்டுகளாக கால்களை கூட அசைக்க முடியாமல் இருக்கிறார்.

மேலும், இவரை கவனித்துக் கொள்ளவே விக்ரமன் படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டதாகவும், தனது சொத்துக்களை விற்றுதான் மருத்துவச் செலவை பார்ப்பதாகவும் ஜெயப்பிரியா தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலாகி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கையும், பாதிக்கப்பட்ட ஜெயப்பிரியாவுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், இயக்குனர் விக்ரமனின் மனைவியை மருத்துவக் குழுவுடன் நேரில் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்துள்ளார். அப்போது ஜெயப்பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் மற்றும் அவர் நடப்பதற்காக மேல் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஜெயப்பிரியாவின் சிகிச்சைக்கு அரசு உதவும் என அமைச்சர் உறுதியளித்தாகக் கூறப்படுகிறது.

Chella

Next Post

ரணகளமாகும் பிக்பாஸ் வீடு..!! வந்த வேகத்தில் வைல்டு கார்டு போட்டியாளர்களை வெளியேற்றிய கேப்டன்..!!

Mon Oct 30 , 2023
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று வரிசையாக இரண்டு போட்டியாளர்களை எலிமினேட் செய்து ட்விஸ்ட் கொடுத்தார் கமல்ஹாசன். அதன்படி, மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். மேலும், நேற்று ஒரே நேரத்தில் 5 வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே அனுப்பி அதிர்ச்சி கொடுத்தார் […]

You May Like