அமலாக்கத் துறையின் சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது. இன்று அதிகாலையில் சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு உதயநிதி ஸ்டாலின், மா. சுப்ரமணியம், ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள் வருகை தந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜி மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கிறார். அமலாக்கத் துறை சோதனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.