fbpx

திடீரென நடிகர் சங்கத்தை அழைத்து ரூ.1 கோடி கொடுத்த அமைச்சர் உதயநிதி..!! எதற்காக தெரியுமா..?

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணி, நடிகர் சங்கத்திற்கு என பிரமாண்டமான கட்டிடம் கட்ட முடிவு செய்தது. தியாகராய நகர் அருகே நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில், நிதி நெருக்கடி காரணமாக பணிகள் பாதியில் நிற்கின்றன. நின்று போன நடிகர் சங்க கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கி இந்த கட்டிடத்தை கட்டுவதற்காக நிதி திரட்டும் நடவடிக்கையில் நடிகர் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் சங்கத்தினரை நேரில் அழைத்து தனது சொந்தப் பணத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். தலைவர் நாசர் மற்றும் விஷால், கார்த்தி மற்றும் கருணாஸ் ஆகிய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளிடம் ரூபாய் 1 கோடிக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார். நடிகர் சங்கத்திற்கு 1 கோடி வழங்கியுள்ள உதயநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார் பொதுச்செயலாளர் விஷால்.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நடிகரும், தயாரிப்பாளருமான விஷால், “அன்புள்ள உதயா, எங்கள் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு உங்கள் பங்களிப்பிற்காகவும், முடிந்தவரை விரைவாக கட்டடம் கட்டும் பணிகளை முடிக்க உதவ முன்வந்ததற்காகவும் நண்பர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் தற்போதைய தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரான உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில் ஒரு அழகான செயல். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

"மோடி பதவி விலக வேண்டும்"... "பாஜக கொள்கையை கேலிக்கூத்தாக்கிய திட்டம்" - சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு பேட்டி.!

Thu Feb 15 , 2024
2018 ஆம் வருடம் பாரதிய ஜனதா கட்சியால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பேச்சுரிமைக்கு எதிரானது என தெரிவித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் சட்டங்கள் செல்லாது என அறிவித்தது. நிலையில் தேர்தல் பத்திரங்களை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய […]

You May Like