fbpx

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் புதிதாக கார் வாங்க தடை!… முதல்வரின் அதிரடி உத்தரவு!

அரசு ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய இனி அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை கட்டாயப்படுத்தப்படும். அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் அரசு பணத்தில் புதிய கார்களை வாங்காமல் ஏற்கனவே அமைச்சர்கள் பயன்படுத்திய பழைய கார்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று மிசோரம் முதல்வர் லால்டு ஹோமா உத்தரவிட்டுள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் நவம்பர் 7-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியில் இருந்து மிசோ தேசிய முன்னணி 10 இடங்களிலும் பா.ஜ.க. 2, காங்கிரஸ் ஒரு இடத்திலும் வென்றன.

ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டு ஹோமா அம்மாநில முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் ஹரிபாபு கம்பம்பட்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். மிசோரம் முதல்வராக பதவியேற்ற உடனேயே லால்டு ஹோமா பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய இனி அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை கட்டாயப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிசோரம் மாநில ஊழல்களை சி.பி.ஐ. விசாரிக்கும். விவசாயிகளுக்கு முன்னுரை அளிக்கப்படும். ஊழல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க மிசோரம் மாநில அரசு முறைப்படியான ஒப்புதல் வழங்கும். மிசோரம் மாநிலத்தை ஊழல் இல்லாத மாநிலமாக மாற்ற மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமாக, பொதுவாக எம்.எல்.ஏக்களுக்கு அரசு பணத்தில் கார்கள் வழங்கப்படும். இதற்காக பொதுமக்கள் பணம் செலவிடப்படும். ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கு புதியதாக அரசு பணத்தில் கார்கள் வாங்க கூடாது என தடையை விதித்துள்ளார் முதல்வர் லால்டுஹோமா. அத்துடன் அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் புதிய கார்களை வாங்காமல் ஏற்கனவே அமைச்சர்கள் பயன்படுத்திய பழைய கார்களைத்தான் பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டிருக்கிறார். முதல்வர் லால்டுஹோமா பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகள் மிசோரம் மாநிலத்தில் பேசுபொருளாகி உள்ளன.

Kokila

Next Post

சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு!… பக்தர்கள் வருகை அதிகரித்தையடுத்து ஏற்பாடு!

Mon Dec 11 , 2023
பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதையடுத்து சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திறண்ட வண்ணம் உள்ளனர். அதோடு, ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு […]

You May Like