சமீபத்திய செல்பேசி சேவைக் கட்டண உயர்வு தொடர்பான தவறான கூற்றுக்களுக்கு தகவல் தொடர்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
டிராய் சட்டம் 1997-ன் விதிகளின்படி, தொலைத்தொடர்பு சேவைகளுக்கான தன்னாட்சிக் கட்டுப்பாட்டு அமைப்பான இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளின் விகிதங்களை ஒழுங்குபடுத்துகிறது. அரசின் கொள்கைகள் மற்றும் டிராய் அறிவித்த ஒழுங்குமுறை கட்டமைப்பு, இந்தியாவில் செல்பேசி சேவைகளின் சந்தாதாரர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் ஒன்றாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, மாதத்திற்கு சராசரியாக 1.89 அமெரிக்க டாலர் விலையில், செல்பேசி சந்தாதாரர்களுக்கு, வரம்பற்ற தொலைபேசி அழைப்பு மற்றும் மாதத்திற்கு 18 ஜிபி தரவு கிடைக்கிறது.இந்தியாவில், தற்போது, மூன்று தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தால் செல்பேசி சேவைகள் வழங்கப்படுகின்றன. போட்டி பார்வையில், இது செல்பேசி சேவைகளுக்கான உகந்த சந்தை கட்டமைப்பாகும். தொலைத்தொடர்பு சேவைகளின் வீதங்கள் சந்தை சக்திகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
இது தன்னாட்சி ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு உட்பட்டது. சுதந்திர சந்தை முடிவுகளில் அரசு தலையிடுவதில்லை. ஏனெனில் செயல்பாடுகள் டிராய் அதிகாரத்தின் கீழ் உள்ளன. செல்பேசி சேவைகளின் கட்டணத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அத்தகைய மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் உள்ளனவா என்பது டிராய்-க்குத் தெரிவிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில், நாடு முழுவதும் 5 ஜி சேவைகளை வெளியிடுவதில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக சராசரி செல்பேசி வேகம் 100 எம்.பி.பி.எஸ் நிலைக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. அக்டோபர் 2022-ல் 111-ல் இருந்த இந்தியாவின் சர்வதேச தரவரிசை இன்று 15 என உயர்ந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தொலைத் தொடர்புத் துறை சர்ச்சைகளில் சிக்கி, வெளிப்படைத்தன்மை இல்லாததால், செல்பேசி சேவைகளின் வளர்ச்சி தேக்கமடைந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், அரசின் முற்போக்கான கொள்கைகள் காரணமாக, தொலைத்தொடர்பு சேவைகளின் விகிதங்கள் அதிவேகமாக வளர்ச்சியடைந்துள்ளன. முற்றிலும் வெளிப்படையானதாகவும், திறமையாகவும் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தின் மூலம் வரி அல்லாத பெருமளவிலான வருவாயை அரசு பெற்றுள்ளது என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.