fbpx

பெண்களுக்கான மிஷன் வாத்சல்யா திட்டத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…! மத்திய அரசு தகவல்…

மிஷன் வாத்சல்யா திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,.

குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக, 2009-10-ம் ஆண்டு முதல், மத்திய நிதியுதவி திட்டமான ‘மிஷன் வாத்சல்யா’ என்ற குழந்தை பாதுகாப்பு சேவைகள் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. ‘மிஷன் வாத்சல்யா’வின் நோக்கம், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தைப் பாதுகாப்பது, அவர்களின் முழுத்திறனை கண்டறிந்து, முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளை உறுதி செய்தல், குழந்தைகள் வளர்ச்சிக்கு ஆதரவான மற்றும் ஏற்புடைய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல், இளம் சிறார் நீதிச்சட்டம் 2015-ஐ செயபல்படுத்துவதில், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உதவுதல் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது, கடினமான சூழல்களில், நிறுவனம் சாராத பராமரிப்பை ஊக்குவிப்பதாகும் .

‘மிஷன் வாத்சல்யா’ சட்டப்பூர்வ அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், சேவை அளிக்கும் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், உயர்தர நிறுவன பராமரிப்பு மற்றும் சேவை அளித்தல், நிறுவனம் சாராத சமூக ரீதியான பராமரிப்பை ஊக்குவித்தல், அவசரகால சேவைகள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாடுகளை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.. மாநில அரசுகள்/யூடி நிர்வாகங்கள் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதி முன்மொழிவு மற்றும் திட்டங்களை வழிகாட்டுதல்களின் நிதி விதிமுறைகளின் அடிப்படையில் மிஷன் வாத்சல்யா திட்டத்தின் கீழ் தயாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மிஷன் வாத்சல்யா திட்டத்தின் விதிமுறைகள் ஏப்ரல் 01, 2022 முதல் அமலுக்கு வரும்.

Also Read: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. இனி RTO அலுவலகம் செல்லாமல் நீங்களும் Licence வாங்க முடியும்…! எப்படி தெரியுமா…?

Vignesh

Next Post

புகழ்பெற்ற ‘The Godfather’ நடிகர் ஜேம்ஸ் கேன் காலமானார்... திரையுலகினர் இரங்கல்...

Fri Jul 8 , 2022
தி காட்பாதர் பட நடிகர் ஜேம்ஸ் கேன் நேற்றிரவு காலமானார்.. அவருக்கு வயது 82.. ஹாலிவுட்டில் 1960களில் ஜேம்ஸ் கேன் சிறிய வேடங்களில் நடிக்க தொடங்கினார்.. பில்லி வைல்டர் ஹோவர்ட் ஹாக்ஸ் மற்றும் கொப்போலா உள்ளிட்ட புகழ்பெற்ற இயக்குனர்களின் படங்களில் சிறிய வேடங்களில் அவர் நடித்து வந்தார்.. ஆனால், ஹாலிவுட்டின் தி காட்பாதர் (The Godfather) படத்தில், ஜேம்ஸ் கேன் நடித்த சோனி கோர்லியோன் கதாப்பாத்திரம் அவருக்கு திருப்பு முனையாக […]

You May Like