Reserve Bank: இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட மைனர்கள் சேமிப்பு மற்றும் கால வைப்பு (டேர்ம் டெபாசிட்) கணக்குகளை தாமாகவே, சுதந்திரமாக தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.
இதுதொடர்பாக வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், சிறார்களின் வைப்பு கணக்குகளைத் திறப்பது மற்றும் செயல்படுத்துவது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. எந்த வயதினரும் தங்கள் சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் சேமிப்பு மற்றும் கால வைப்பு கணக்குகளைத் திறந்து இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாயை பாதுகாவலராகக் கொண்டு அத்தகைய கணக்குகளைத் திறக்கவும் அவர்கள் அனுமதிக்கப்படலாம்.
10 வயதுக்குக் குறையாத வயது வரம்பைத் தாண்டிய மைனர்கள், வங்கிகள் தங்கள் இடர் மேலாண்மைக் கொள்கையைக் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கும் தொகை மற்றும் விதிமுறைகள் வரை, அவர்கள் விரும்பினால், சேமிப்பு/கால வைப்பு கணக்குகளைத் திறந்து இயக்க அனுமதிக்கப்படலாம், மேலும் அத்தகைய விதிமுறைகள் கணக்கு வைத்திருப்பவருக்கு முறையாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.
மேலும், இணைய வங்கி சேவை, ஏ.டி.எம்., வசதிக்கான டெபிட் கார்டு, காசோலை உள்ளிட்ட வசதிகளை வழங்குவது வங்கிகளின் முடிவுக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்குகளில் எப்போதுமே ஏதேனும் இருப்பு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 18 வயது பூர்த்தியானவுடன், கணக்கு வைத்திருப்பவரின் கையொப்பத்தை பெற்று, வழக்கமான நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகள் இந்த புதிய வழிகாட்டுதல்களை வரும் ஜூலை மாதத்துக்கு முன்னதாக நடைமுறைப்படுத்த வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிகள், தாமாகவோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ இயக்கப்படும் சிறார்களின் கணக்குகளில் அதிகப்படியான பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதையும், அவை எப்போதும் கடன் இருப்பில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
Readmore: நிதியை முடக்கிய விவகாரம்!. டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்தது ஹார்வர்ட் பல்கலைக்கழகம்!.