fbpx

முற்பகலில் தீவிர புயலாக வலுப்பெறும் ’மிக்ஜாம்’..!! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் இன்று முற்பகலுக்குள் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடல் பகுதியில் கடந்த 27ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர், இது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிச.3) நேற்று புயலாக வலுவடைந்து. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் (டிச.3) நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வளசரவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், இன்று முற்பகலில் தீவிரப் புயலாக மிக்ஜம் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இரவு வரை காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

அபாய கட்டம்..!! 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து..!! பாதுகாப்பான இடங்களுக்கு போங்க..!! அமைச்சர் வேண்டுகோள்..!!

Mon Dec 4 , 2023
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், சென்னையில் அடையாறு ஆற்றங்கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சென்னை பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி இடையே உள்ள பாலத்தில் அபாய கட்டத்தை […]

You May Like