தெலங்கானாவில் 24 விரல்களோடு பிறந்த அதிசய குழந்தையை அந்த பகுதி மக்கள் தெய்வமாக வழிபடும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில், நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராவளி, இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அங்கு உள்ள கோரட்லா எனும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான ஆன் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை ஒவ்வொரு கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்களை கொண்டு பிறந்துள்ளது. இந்த குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலும் 10 கை மற்றும் 10 கால்களை கொண்டு பிறப்பது இயல்பு, அதிலும் சில குழந்தைகள் 6 விரல்களோடு பிறப்பது அரிது. இந்நிலையில் இந்த குழந்தை மொத்தமாக 24 விரல்களுடன் பிறந்துள்ளது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் அந்த குழந்தை தெய்வத்தின் மறு உருவம் என்றும் கூறி வழிபட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.