fbpx

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் பற்றி தவறான வகையில் விளம்பரம்…! ரூ.3 லட்சம் அபராதம்… மத்திய அரசு நடவடிக்கை..!

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் நிதி கரே மற்றும் ஆணையர் அனுபம் மிஸ்ரா ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்

நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி, எந்தவொரு பொருட்கள் அல்லது சேவைகள் குறித்தும் தவறான வகையில் விளம்பரம் செய்யப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தேர்வுகள் குறித்து தவறான விளம்பரம் செய்த பல்வேறு பயிற்சி நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இதுவரை 46 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. 24 பயிற்சி நிறுவனங்களுக்கு ரூ.77 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. மேலும் தவறான விளம்பரங்களை நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

English Summary

Misleading advertisement about IIT-JEE exam results

Vignesh

Next Post

மணிப்பூரில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி..!! மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு..!!

Sat Feb 15 , 2025
With President's rule imposed in the state of Manipur, security arrangements have been strengthened there.

You May Like