fbpx

செய்தி நேரலையின்போது ஏவுகணை தாக்குதல்!… உச்சமடைந்த இஸ்ரேல் பாலஸ்தீன போர்!… அதிர்ச்சி வீடியோ!

இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சமடைந்து வரும் நிலையில், தொலைக்காட்சி ஒன்றில் செய்தி நேரலையின்போது காஸா நகரின் மையப்பகுதியில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதல், குறித்த வீடியோ வெளியாக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர்,  இஸ்ரேலின் டெல் அவி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஐந்தாயிரம் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, போர் பிரகடனத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். தொடர்ந்து, காசா நகரில் ஏவுகணை மற்றும் டிரோன் குண்டுகளை வீசி இஸ்ரேலும் பதிலடி தாக்குதலை தொடர்ந்தது. இந்த நிலையில், காசா நகரில் நிலவும் நிலை குறித்து தெரிவிக்க அல் ஜசிரா தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் நேரலையில் இணைந்தார்.

அப்போது, அவருக்கு பின் பகுதியில் இருந்த கட்டிடங்களில் ஏவுகணை குண்டுகளை வீசி, இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதனை சற்றும் எதிர்பாராத பெண் செய்தியாளர், அச்சத்தில் உறைந்தார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Kokila

Next Post

தினமும் ஒரு கிளாஸ் பெருங்காயத் தண்ணீர் குடிச்சா இத்தனை நன்மைகளா!!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

Mon Oct 9 , 2023
நாம் சமையல் அறையில் அதிகம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று பெருங்காயம். பெருங்காயத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. பெருங்காயத்தை நாம் சமையலில் சேர்ப்பது நல்லது. அதே சமயம் பெருங்காய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. இதற்க்கு முதலில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ½ தேக்கரண்டி பெருங்காயத் தூளை சேர்க்கவும். இந்த பெருகாயம் நீரை குடிப்பதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.. […]

You May Like