அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தின் கிலீவ்லேண்ட் பகுதியில் தெலுங்கு மாணவர் உமா சத்ய சாய் கட்டே என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக முகமது அப்துல் அர்பத் காணாமல் போன நிலையில் சடலமாக கண்டெடுத்துள்ளனர். இவரோடு சேர்ந்து அமெரிக்காவில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்தே இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். கொலை, விபத்து, மர்ம உயிரிழப்பு மற்றும் இதர விஷயங்கள் இந்திய மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக உள்ளன. அமெரிக்காவில் ஏற்கெனவே 13 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது 14-வது மாணவனாக சாய் கட்டே என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமெரிக்க உளவுப் பிரிவு எப்பிஐ விசாரணை நடத்த வேண்டும் என ‘தி குளோபல் இந்து ஹெரிடேஜ் அறக்கட்டளை’ சார்பில் மனு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தந்து எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “முகமது அப்துல் அர்பத், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் இறந்து கிடந்தார் என்பதை அறிந்து வேதனை அடைகிறோம். மரணம் குறித்து முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்காக அமெரிக்க போலீஸுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். அர்பத்தின் அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல, அவரது குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்” என்று பதிவிட்டுள்ளது.