ரத்த அழுத்தத்தை குறைக்க சில வீட்டு வைத்திய முறையை நாம் எவ்வாறு பின்பற்றலாம் என மருத்துவர் சந்தோஷிமா தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழலில் மக்கள் மத்தியில் வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் மற்றும் மன அழுத்தம் காரணமாக பலரும் உயர் ரத்த அழுத்தத்தால் பாத்க்கப்படுகின்றனர். எனவே, இதனை வீட்டு வைத்திய முறையில் எப்படி குணப்படுத்தலாம் என்பதை மருத்துவர் சந்தோஷிமா விளக்கியுள்ளார்.
அதாவது, ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறுடன், கால் ஸ்பூன் முதல் அரை ஸ்பூன் வரை பட்டை பொடி, 2 சிட்டிகை சுத்தமான விரலி மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து காலை நேரத்தில் குடிக்கலாம். இப்படி தினமும் குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் குறையும். இது தவிர சீரகத்தையும் மருந்தாக பயன்படுத்தலாம்.
அதன்படி, எண்ணெய் சேர்க்காமல் சீரகத்தை நன்றாக வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து அதில் தேன் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம் என்று மருத்துவர் சந்தோஷிமா தெரிவித்துள்ளார். ஏனென்றால், சீரகத்தில் இருக்கும் தன்மை, உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. எனவே, இதனையும் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம்.
இது போன்று வீட்டு வைத்திய முறையில் மருந்துகளை உட்கொள்ளலாம் என நினைப்பவர்கள், தாங்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை எக்காரணம் கொண்டும் உடனடியாக தவிர்க்கக் கூடாது. இவ்வாறு செய்யும் போது அவை நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.