fbpx

மிசோரம் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம்… காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 – பிரதமர் மோடி அறிவிப்பு…

மிசோரம் மாநிலம் சைரங் என்ற இடத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் இன்று எதிர்பாராதவிதமாக பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 17 உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிந்து விழுந்த ரயில்வே பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்தபோது 40-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் இருந்ததால் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், மிசோரமில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு 50,000 வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் “மிசோரமில் பாலம் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. உதவித் தொகையாக ரூ. இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் PMNRF இலிருந்து 2 லட்சம் வழங்கப்படும். ரூ. காயமடைந்தவர்களுக்கு 50,000 வழங்கப்படும்” என பதிவிட்டிருந்தார்.

Kathir

Next Post

எல்லையற்ற உல்லாசம் திடீரென்று தெரிய வந்த உண்மை….! பேச மறுத்த கள்ளகாதலியை கள்ளக்காதலன் என்ன செய்தார் தெரியுமா….?

Wed Aug 23 , 2023
கணவருக்கு உண்மை தெரிய வந்ததால், கள்ளக்காதலனுடன் இருந்த தொடர்பை துண்டித்த இளம் பெண்ணை கொடூரமாக, கொலை செய்த கள்ளக்காதலனால், செங்கல்பட்டு அருகே பரபரப்பு. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர் (26) என்பவர், தாரணி(21) என்ற பெண்ணை காதலித்து, திருமணம் செய்தார். கூலி வேலை செய்து வரும் சுந்தரும், சிங்கப்பெருமாள் கோவில்நகர் ரோசாபுரம் பகுதியைச் சேர்ந்த சுதீன் என்ற இளைஞரும் சில வருடங்களாக நண்பர்களாக பழகி […]

You May Like