fbpx

ஜன: 2,3 ஆகிய தேதிகளில் மாதிரி ஆளுமைத் தேர்வு நடைபெறும்…! அரசு சூப்பர் அறிவிப்பு…!

இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில், இப்பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நெருங்கும் தேர்வு முடிவுகள்..!! குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு? உங்கள் சந்தேகத்திற்கு பதில் இங்கே..!!

இப்பயிற்சி மையத்தில் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்திய வனப்பணி முதன்மைத் தேர்விற்காக 9 ஆர்வலர்கள் தங்கி பயின்றார்கள். அவர்களில் 5 ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3 ஆர்வலர்கள் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த ஆர்வலர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமைத் தேர்வு, பணியில் உள்ள ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்களாலும், தலை சிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது. இது, தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள், தங்களது மாதிரி ஆளுமைத் தேர்வை மிகச் சிறப்பான முறையில் எதிர்கொள்ள ஏதுவாக அமையும்.

இப்பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள் தவிர, மேற்குறித்த வனப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சார்ந்த பிற ஆர்வலர்களும், இப்பயிற்சி மையத்தில் 02.01.2023 மற்றும் 03.01.2023 அன்று நடைபெறவுள்ள மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெறலாம். அவ்வாறு பங்கு பெற விரும்பும் ஆர்வலர்கள், தங்களது விருப்பத்தினை, (DAF-I மற்றும் DAF-II) aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். இது தொடர்பான விவரங்களை www.civilserviceindia.com என்ற இணைய தளத்தில் காணலாம்.

Vignesh

Next Post

பொங்கல் பரிசு தொகை வரவில்லையா...? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க...! ஆட்சியர் அறிவிப்பு...!

Sat Dec 31 , 2022
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதில் புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க தொலைபேசி எண்களை கோயம்புத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;:2023-ம் ஆண்டு பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் கூடிய ஒரு முழுக்கரும்பு […]
பொங்கல் பண்டிகை முதல்..!! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..!! வங்கிக் கணக்கு பணிகள் தீவிரம்..!!

You May Like