fbpx

கோவில் முதல் மரியாதை விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு…..! அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் 5️ லட்சம் ரூபாய் ரொக்கம் 5️ சவரன் நகை திருட்டு அதிமுக தலைமை கடும் கண்டனம்……!

மதுரை மாவட்டம் எம் சத்திரப்பட்டி அருகே உள்ள கருவானூர் கோவில் திருவிழாவில் முதல் மரியாதை பெறுவதில் அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலம், திமுகவின் கிளை செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை எழுந்தது.

இது குறித்து இருதரப்பினரும் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். அதன் ஒரு பகுதியாக கருவானூரில் இருக்கின்ற முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலத்தின் வீட்டுக்குள் வேல்முருகன் தரப்பினர் புகுந்து தாக்குதல் நடத்தி அங்கிருந்த கார் இருசக்கர வாகனம் முடித்துவிட்டு இருக்கு தீ வைத்து சேதப்படுத்தினர். மேலும் அவருடைய வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.

இது தொடர்பாக வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இருதரப்பைச் சேர்ந்த சுமார் 18க்கும் அதிகமானவர்கள் மீது எம் சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பொன்னம்பலம் (65) அவருடைய மகன்கள் திருச்சிற்றம்பலம் (45) தில்லை அம்பலம் (42) திமுக வின் நிர்வாகி வேல்முருகன் (40), செந்தமிழன் (35), அவருடைய சகோதரர் ராஜ்மோகன் (33) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு நடுவே பொன்னம்பலம் வீட்டில் இருந்த 5️ லட்சம் ரூபாய் பணம் 5 பவுன் நகை மற்றும் சில ஆவணங்கள் திருடு போனதாக அவரது மனைவி பழனியம்மாள் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் பெயரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் வீடு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பொன்னம்பலம் வீட்டிற்கு நேரில் சென்று திமுக கும்பலால் தாக்கப்பட்ட சம்பவத்தில் சேதம் அடைந்த வாகனங்களை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்ததாவது, கருவனூரில் அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலம் மற்றும் அவருடைய குடும்பத்தினரை திமுக தரப்பினர் தாக்கி அவரின் வீட்டையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள். அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. வீட்டுக்கு புகுந்து பாத்திரங்களை எடுத்துச் சென்று இருக்கிறார்கள். சட்ட ரீதியாக அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகவே தொடர்ந்து, மோதல் நடைபெற்று வந்த காரணத்தால், கருவனூர் கிராமத்தில் சென்ற சில தினங்களாக பதற்றம் நிலவி வருகிறது. கோவில் திருவிழாவில் பங்காளிகளுக்குள் ஏற்பட்ட மோதல் தற்சமயம் அரசியல் ரீதியிலான மோதலாக மாறி இருக்கிறது. மேலும் மோதல் ஏற்படாத விதத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

Next Post

சென்னையில் கத்தி முனையில் ரயிலில் பெண் பயணியிடம் 9 பவுன் நகையை பறித்த திருடன்…..! உட்பட 4️ பேர் அதிரடி கைது…..!

Wed Jun 28 , 2023
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (34) இவருடைய மனைவி சரண்யா இவர்கள் தங்களுடைய இரண்டு குழந்தைகளுடன் திருப்பதிக்குச் சென்றனர். அதன் பிறகு ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் மும்பையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்ட அதிவிரைவு ரயிலில் கடந்த 25 ஆம் தேதி இரவு 7:20 மணி அளவில் ஏறியுள்ளனர். இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் 2ம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ரமேஷ் ஏறியுள்ளார். முன்னதாக அவரது மனைவி […]

You May Like