கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..
கொரொனா பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மை பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது… உறுதியானவர்களில் பெரும்பாலனவர்கள் ஆண்கள் ஆவர்.. குறிப்பாக ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் அதிகமாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இருபாலினம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் மற்றும் சமூக மற்றும் பாலியல் வலைப்பின்னல்களைக் கொண்ட பிற ஆண்களிடையே குரங்கு அம்மை ஏற்படுகின்றன..
ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 63 நாடுகளில் குரங்கு அம்மை தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த 14-ம் தேதி கேரள மாநிலத்தில் முதல் குரங்கு அம்மை தொற்று உறுதியானது. இதையடுத்து தமிழகம்- கேரள எல்லையில் 13 இடங்களில் குரங்கு அம்மை கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள விமானங்களில் வருவோரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் 2% பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல், குரங்கு அம்மை சேர்த்து பரிசோதனை செய்யப்படுகிறது. பாதிப்பு அதிகம் கொண்ட குறிப்பிட்ட நாட்டில் இருந்து வருவோரில் முகம் கையில் கொப்பளம் உள்ளதா என ஆய்வு செய்யப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.. ஏற்கனவே கேரளாவில் 2 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 3-ஆக உயர்ந்துள்ளது.. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை தொற்று அனைத்துமே கேரளாவின் உறுதி செய்யப்பட்டுள்ளன..