fbpx

குரங்கு அம்மை..!! அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அவசர கடிதம்..!! பீதியில் மக்கள்..!!

குரங்கு அம்மை தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா மாநிலங்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், குரங்கு அம்மை நோய் தடுப்பு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், குரங்கு அம்மை நோயின் உருமாறிய வகையான கிளேட் 1 வகையில் சிக்கல்கள் அதிகம் என்பதால் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தடுப்பு நடவடிக்கைகளை சரியாக எடுக்க வேண்டும்.

குரங்கு அம்மை தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதே நேரத்தில் மக்களிடையே எந்த பீதியும் ஏற்படாமல் தடுப்பதும் முக்கியம். ஆரம்பகால நோயறிதலுக்காக அங்கீகரிக்கப்பட்ட PCR கருவிகள் மற்றும் 36 ICMR-ஆதரவு ஆய்வகங்கள் ஆகியவற்றுடன் வலுவான சோதனை உள்கட்டமைப்பு உள்ளது என்று சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதியளித்தது.

சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்காக மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் போதுமான அளவு மருத்துவ உபகரணங்களை உறுதி செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் அந்த கடிதம் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Read More : இன்று புரட்டாசி வெள்ளிக்கிழமை..!! மகாலட்சுமியை இப்படி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்..!!

English Summary

The central government has written an urgent letter to all states and union territories regarding monkey measles.

Chella

Next Post

திமுக நிர்வாகியை சுத்துப் போட்ட கும்பல்..!! துண்டான கை..!! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!! திண்டுக்கல்லில் ஷாக்..!!

Fri Sep 27 , 2024
A famous rowdy was hacked to death by unknown assailants in Dindigul.

You May Like