fbpx

பிரேசில் வெள்ளம் | நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 உயிரிழப்பு.. 33 பேர் மாயம்!!

பிரேசில் நாட்டில் கடந்த மே மாதம் முதல் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கனமழை பெய்து வருகிறது. தெற்கு மாநிலமான க்யூ கிராண்ட் டு சுல் பகுதியில் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நகரின் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 33 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேரழிவின் உச்சமாக 4,50,000 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 29 ல் தொடங்கிய எதிர்பாராத பேரிடரால் 23.9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸின்ஹீவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

English Summary

Monsoon has been pouring in Brazil since last May. Especially in the southern province of Rio Grande do Sul, it is raining heavily

Next Post

வருமான வரிக் கணக்கு..!! இந்த தவறை செய்தால் கண்டிப்பா அபராதம் தான்..!! மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

Tue Jul 2 , 2024
If the last date is fixed for filing income tax return, failure to file within that time will result in heavy penalty.

You May Like