தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் விருப்பம் உள்ள மாணவர்கள் நாளைக்குள் (ஆகஸ்ட் 31) விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கட்டிட பொறியாளர் உதவியாளர், கட்டட பட வரையாளர், இயந்திர பட வரையாளர் மற்றும் லிப்ட் மெக்கானிக் ஆகிய தொழிற் பிரிவுகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிப்ளமோ அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிகள் முடிவடைந்த உடன் நேர்காணல் நடத்திய தொழில் நிறுவனங்களில் 100% வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.750 மாதம் உதவித்தொகை, பாட புத்தகங்கள், வரைபடக் கருவி, 2 ஜோடி சீருடைகள், பேருந்து பயண அட்டை மற்றும் மூடு காலனி ஆகியவை தமிழக அரசால் வழங்கப்படும் எனவும் தங்கிப் படிக்க விடுதி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் படிப்புகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.