fbpx

கொடைக்கானல் அருகே…..! கடமானை வேட்டையாடிய 3 பேர் அதிரடி கைது…..!

கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி அடுத்துள்ள பெரும்பாறை பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் வனவர் அறிவழகன், வனக்காப்பாளர்கள் பீட்டர் ராஜா, திலக ராஜா, ராமசாமி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிக்கு சென்றனர்.

அப்போது நேர்மறை பகுதியில் இருக்கின்ற காபி தோட்டத்தில் விளக்கு வெளிச்சம் தெரிந்ததால் சந்தேகம் அடைந்த அவர்கள், அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர் அப்போது சிலர் நெற்றியில் விளக்கை கட்டிக்கொண்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.

அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்தனர் பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெள்ளி கரையைச் சார்ந்த ஜோதிலிங்கம்(31), மஞ்சள் பரப்பை சேர்ந்த ரஞ்சித்(33), மதன்குமார்(19) உள்ளிட்டோர் என்பதும் இவர்கள் கடமானை வேட்டையாடியதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து கடமான் இறைச்சி 5 ஏர்கண்கள், தோட்டாக்கள் மற்றும் கத்தி அரிவாள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் தப்பிச்சென்ற சிலரை தேடி வருகின்றனர்.

Next Post

”எங்க ஓடினாலும் விடமாட்டேன்”..!! திருமணத்தன்று தப்பியோடிய காதலனை 20 கிமீ வரை துரத்திச் சென்று பிடித்த காதலி..!!

Thu May 25 , 2023
காதலித்தவனையே கரம் பிடிப்பது எல்லாம் வரம் தான். ஆனால், அப்படி காதலித்து, வேறு வழியில்லாமல் திருமணம் வரை வந்த காதலன், திருமணம் முடிந்த கையோடு எஸ்கேப் ஆக நினைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனின் சுயரூபம் தெரிந்திருக்குமோ என்னமோ? காதலி 20 கி.மீ. வரை விடாது துரத்தி, தப்பி ஓட முயன்ற காதலனைப் பிடித்து, மண்டபத்திற்கு இழுத்து வந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் தான் இந்த கூத்து அரங்கேறியுள்ளது. […]
”எங்க ஓடினாலும் விடமாட்டேன்”..!! திருமணத்தன்று தப்பியோடிய காதலனை 20 கிமீ வரை துரத்திச் சென்று பிடித்த காதலி..!!

You May Like