fbpx

கொரோனாவை விட பவர்ஃபுல்..!! அடுத்து மிரட்ட வரும் ’Disease X’..!! அதிர்ச்சியில் ஆய்வாளர்கள்..!!

கொரோனாவின் கோரத் தாண்டவமே இப்போது தான் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து ஆய்வாளர்கள் டிசீஸ் எக்ஸ் குறித்த ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

டிசீஸ் எக்ஸ் (Disease X)- இப்போது உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் இதைச் சுற்றியே தங்கள் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். ஆனால், இது எதோ பழமையான நோய் எல்லாம் கிடையாது. சொல்லப்போனால் கடந்தாண்டு தான் இந்த வார்த்தையே உருவாக்கப்பட்டது. அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு எப்படி கொரோனா வந்து கோரத் தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றதோ, அதேபோல அடுத்த முறை எதாவது பெருந்தொற்று ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதை மையப்படுத்தி நடப்பதே இந்த டிசீஸ் எக்ஸ் ஆய்வாகும்.

அதாவது, எபோலா வைரஸ் போன்ற ஏற்கனவே தெரிந்த ஒரு தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதை விட, எதிர்காலத்தில் தோன்றும் பெருந்தொற்றை சமாளிக்க என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும். அதாவது, இதுவரை நமக்குத் தெரியாத ஒரு வகையான நுண்ணுயிர் பாதிப்பால் ஏற்படும் பெருந்தொற்றை தான் டிசீஸ் எக்ஸ் என்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு கடந்த 2017ஆம் ஆண்டில் இந்த டீசிஸ் எக்ஸ் குறித்த ஆய்வுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறியது. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், கொரோனா வைரஸும் ஒரு வகையான டீசீஸ் எக்ஸ் தான். அதாவது கொரோனா பரவும் முன்பு வரை அது குறித்து யாருக்கும் தெரியாது. ஆனால், அதன் பிறகு உலகையே முடக்கிப்போட்டது.

கொரோனா போலவே விலங்குகளிடையே பல நூறு வைரஸ் பாதிப்புகள் பரவி வருகிறது. அவை மனிதர்களுக்குப் பரவினால் அது கொரோனாவை போலப் பேரழிவை உருவாக்கும். இது புது வித பாதிப்பு என்பதால் யாருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியும் இருக்காது. எனவே, அதனால் ஏற்பட்ட பாதிப்பு மிக மோசமாக இருக்கும். வரும் காலத்தில் ஏற்படும் யாருக்கும் புரியாத இந்த டீசீஸ் எக்ஸ் பாதிப்பை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். மேற்கு ஆபிரிக்காவில் 2014-2016 காலகட்டத்தில் ஏற்பட்ட எபோலா தொற்று நமக்கான எச்சரிக்கை மணியாகும். மருத்துவத் துறையில் நாம் மேம்பட்டு இருப்பதாகக் கருதி போதிலும் சுமார் 11,000 பேரை நாம் இழந்தோம்.

கொரோனாவுக்கான மரபணு வரிசை கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து வெறும் 326 நாட்களில் கொரோனா வேக்சின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை ஒரு பெருந்தொற்று ஏற்படும் போது 100 நாட்களில் வேக்சினை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இந்த டிசீஸ் எக்ஸ் குறித்த ஆய்வாக உள்ளது. திடீரென ஒரு பெருந்தொற்று ஏற்படும் போது அதன் மரபணு வரிசையைக் கண்டறிந்து அதற்கான தடுப்பூசி கண்டறியும் ஆய்வுகளைத் தொடங்க வேண்டும். விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடிய வைரஸ் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து எதிர்கால நோய்ப் பாதிப்பைத் தடுப்பதே குளோபல் வைரோம் திட்டமாகும். இதில் நாம் குறிப்பிடத்தக்க அளவு பணிகளை மேற்கொண்டுள்ள போதிலும், இன்னும் இதில் பல சவால்கள் உள்ளது.

பின்தங்கிய நாடுகளில் சுகாதார கட்டமைப்பு வலுவாக இல்லாத நிலையில், அதையும் நாம் மேம்படுத்த வேண்டும். இப்படிப் பல சவால்கள் இருக்கும் நிலையில், அத்தனைக்கும் பதில்களைக் கண்டறிந்தால் மட்டுமே டிசீஸ் எக்ஸ் பாதிப்பை நம்மால் சமாளிக்க முடியும்.

Chella

Next Post

NEWS ALERT: 'ராமர் கோவில்' கும்பாபிஷேகத்திற்கும் முன் பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக.! பிள்ளையார் சுழி போட்ட ஜே.பி நட்டா.!

Tue Jan 16 , 2024
2024 ஆம் வருட பொதுத் தேர்தலுக்கான பணிகளை பாரதிய ஜனதா கட்சி தொடங்கி இருக்கிறது. இந்த பொது தேர்தலுக்கான சுவர் விளம்பர பணிகளை அந்தக் கட்சியின் தலைவர் ஜே.பி நட்டா டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொது தேர்தலுக்கான பணிகளை தேர்தல் […]

You May Like