fbpx

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 2 மாதங்களை தாண்டியுள்ள நிலையில், 5000 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 28 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதில், கூலிப்படையை சேர்ந்த திருவேங்கடம் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தில் பல ரௌடிகள் கைகோர்த்து செயல்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 2 மாதங்களை தாண்டியுள்ள நிலையில், 5000 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 28 பேரில் 25 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அண்மையில் சென்னை மாநகர காவர் ஆணையர் அருண் தெரிவித்திருந்த நிலையில் தற்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read more ; ஈரான் – இஸ்ரேல் மோதல் : மூன்றாம் உலகப் போரை தாமதப்படுத்துவது எது? நிபுணர்கள் கருத்து

English Summary

More than two months after Armstrong’s murder, the police have filed a 5,000-page charge sheet.

Next Post

திரைப்படத்தில் அந்தரங்க காட்சி..!! நடிகர்களின் உணர்வுகள் இப்படித்தான் இருக்கும்..!! தமன்னா ஓபன் டாக்..!!

Thu Oct 3 , 2024
Tamannaah has spoken about the intimate scenes and feelings of the male actors in the film.

You May Like