fbpx

உடலுக்கு வலு சேர்க்கும் முருங்கைக் கீரை சட்னி..!! வாரத்தில் 2 முறை போதும்..!! இப்படி டிரை பண்ணி பாருங்க..!!

உடலுக்கு வலு சேர்க்க கூடிய முருங்கைக் கீரை சட்னி வாரத்தில் இருமுறை சாப்பிட்டால் எந்த நோயும் உங்களை நெருங்காது. அப்படிப்பட்ட முருங்கைகீரையை செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முருங்கை இலை – 2 கைப்பிடி அளவு

சின்ன வெங்காயம் – 200 கிராம்

தக்காளி – 3

புளி – ஒரு எலுமிச்சை அளவு

சீரகம் – 2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4 முதல் 5

கொத்தமல்லி விதைகள் – 3 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – தேவையான அளவு

கடலை எண்ணெய்

கருவேப்பிலை

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை எண்ணெய்யை ஊற்றி, அது காய்ந்த பின், சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். பின்னர், அதில் முருங்கைக் கீரையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். முருங்கைக்கீரை இலை சுருண்ட நிலையில் இருக்கும் போது, அதில் கருவேப்பிலையை சேர்த்து 2 நிமிடம் வதக்கி பின்னர் அதில் நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும். அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து வதக்க வேண்டும்.

5 நிமிடங்கள் நன்றாக வதக்கிய பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பாத்திரத்தில் போடப்பட்ட முருங்கைக்கீரை, கொத்தமல்லி, சீரகம் வெங்காயம், தக்காளி என அனைத்து பொருட்களும் நன்கு வதங்கிய பிறகு கொத்தமல்லியை இலையை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். வதக்கிய பொருட்களை ஆற வைத்து அதனுடன் தேவையான அளவு புளி மற்றும் உப்பை சேர்த்து அம்மி அல்லது உரலில் அரைக்க வேண்டும்.

மிக்ஸியில் அரைப்பதை விட அம்மி அல்லது உரலில் அரைப்பது நல்ல சுவையை கூட்டி தரும். 90 சதவீதம் அரைத்த பிறகு அதை எடுத்து கம்மஞ்சோறு, சுடு சாப்பாடு, தோசை, இட்லியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். இந்த சட்னி செய்யும் போது கவனிக்க வேண்டியது சிறிய வெங்காயத்தை மட்டும் தான் சேர்க்க வேண்டும். அதேபோல், அனைத்து பொருட்களும் நன்றாக எண்ணையில் வதங்க வேண்டும். பச்சை வாசம் நீங்கும் அளவிற்கு வதக்கினால்தான் சுவை நன்றாக இருக்கும். குறிப்பாக, முருங்கைக்கீரையை காம்புடன் போடக் கூடாது.

Read More : அரசு ஊழியர்கள் மீது வழக்கா..? இனி அனுமதி பெற வேண்டும்..!! உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு..!!

English Summary

No disease will come close to you if you eat Moringa Spinach Chutney twice a week to strengthen the body.

Chella

Next Post

“முகுந்தின் ஜாதி பேர் சொல்ல உங்களுக்கு என்ன கேடு?” ஜாதியை மறைத்ததால் கொந்தளித்த நடிகை..

Wed Nov 6 , 2024
Actress raised her voice as the caste of mukund is not mentioned in the movie

You May Like