தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைக்கின்றார்.
மதுரையில் வரும் 15 ம் தேதி முதல் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இதன் படி அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் மாநகராட்சி , நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1545 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 1.14 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவிபடுத்தப்பட உள்ளது.

காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் சூடான, சத்தான உணவை சமைத்து அனைத்து பள்ளி நாட்களிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரமும் அதில் உள்ளது. அண்ணா பிறந்த நாளானா செப்டம்பர் 15 ம் தேதி மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். சென்னை உள்பட 14 மாநகராட்சிகளில் 318 பள்ளிகளில் 37,740 மாணவ , மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. தமிழகததில் 23 நகராட்சிகளில் 163 பள்ளிகளில் 17,427 மாணவ , மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.