fbpx

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள்!… கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!… பட்டியல் இதோ!

ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கிறிஸ் கெயிலின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் 65ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் குறிப்பாக விராட் கோலி 62 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு சதமடித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இந்த சதத்தின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் வரலாற்றில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. T20, டெஸ்ட் மற்றும் ODI ஆகியவற்றில் அற்புதமான சதங்களை அடித்துள்ளார். ஹைதராபாத்தின் சொந்த மைதானத்தில் ஐபிஎல்லில் தனது 4 வருட சத வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு, கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கழித்து, ஐபிஎல்லில் விராட் கோலி அடித்த முதல் சதம் இதுவாகும். ஐபிஎல்லில் தனது 6வது சதத்துடன், போட்டி வரலாற்றில் அதிக சதங்களை அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். 2023 ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது சிறப்பான பேட்டிங்கால் 500 ரன்களை கடந்தார். மேலும், இந்த சீசனில் தனது நான்காவது சத பார்ட்னர்ஷிப்பை ஃபாஃப் டு பிளெசிஸுடன் பகிர்ந்து கொண்டார். இந்த சீசனில் 13 இன்னிங்ஸ்களில் 6 அரை சதம் மற்றும் ஒரு சதம் உட்பட 538 ரன்கள் எடுத்துள்ளார். விராட் கோலி இதற்கு முன்பு 2016-ஆம் ஆண்டில் நான்கு சதங்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்: விராட் கோலி – 6, கிறிஸ் கெய்ல் – 6, ஜோஸ் பட்லர் – 5, கேஎல் ராகுல் – 4, டேவிட் வார்னர் – 4, ஷேன் வாட்சன் – 4 என ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்துள்ளனர். இந்த சீசனின் ஆரஞ்சு கேப் பட்டியலில் ஃபாஃப் டு பிளெசிஸ், ஷுப்மான் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்குப் பிறகு விராட் நான்காவது இடத்தில் உள்ளார்.

Kokila

Next Post

மின்னணு முறையில்‌ சந்தைப்படுத்தல்‌ பற்றி இணையவழி கருத்தரங்கம்‌...! மிஸ் பண்ணிடாதீங்க மக்களே...!

Sat May 20 , 2023
தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌,சென்னை, மின்னணு முறையில்‌ சந்தைப்படுத்தல்‌ குறித்த இணையவழி கருத்தரங்கம்‌ இன்று காலை 10.30 மணி முதல்‌ மதியம்‌ 5.30 மணி வரை வழங்க உள்ளது. இப்பயிற்சியில்‌ மின்னணு முறையில்‌ சந்தைப்படுத்தல்‌ மின்னணு முறையின்‌ நுட்பங்கள்‌, இணையதளத்தை உருவாக்குதல்‌, டொமைன்‌ பெயர்‌ உருவாக்குதல்‌ & ஹோஸ்டிங்‌, இணையதள வடிவமைப்பு நுட்பங்கள்‌ மற்றும்‌ விதிகள்‌, மின்னணு முறையில்‌ சந்தைப்படுத்தல்‌ நன்மைகளை விளக்குதல்‌, உள்ளிட்டவை […]

You May Like