கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் பிள்ளைத்தோப்பில் வசித்து வருபவர் மரிய ரூபன். இவர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிற நிலையில், இவரின் மனைவி ஆரோக்கிய ஆஸ்மி மற்றும் 6-ம் வகுப்பு பயிலும் மகளும் பிள்ளைத்தோப்பில் வசித்து வருகின்றனர்.
ஆரோக்கிய ஆஸ்மி தன்னுடைய மகளிற்கு அதிக வேலை செய்ய வைப்பதோடு, தலை, கை, கால் பகுதிகளில் சூடு வைப்பதும், கொடூரமாக அடிப்பதும் ஆகிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அச்சிறுமிக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டு , கட்டும் போட்டுள்ளார்.
இது பற்றி, சிறுமியின் அக்கம், பக்கத்தினர் குழந்தைகள் நல அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அச்சிறுமியின் வீட்டிற்குப் சென்று, அவரை மீட்டனர். அத்துடன் சிறுமியை உடல் மற்றும் மன ரீதியாகத் துன்புறுத்தி வந்த அவரது தாய் ஆரோக்கிய ஆஸ்மியின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது சிறுமி காப்பகம் ஒன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி தகவல் வெளிநாட்டில் இருக்கும் சிறுமியின் தந்தை மரிய ரூபனுக்கு தெரியவந்ததால் சொந்த ஊருக்கு திரும்புகிறார். தாயானவள் பெற்ற குழந்தையை இவ்வாறு செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.