fbpx

மாமியார், நாத்தனார் கொடுமை..!! உருக்கமான வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்..!!

வரதட்சணை கொடுமையால் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் ராகவேந்தர் – அபிராமி (31) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணமான நிலையில், கணவன் ராகவேந்தரின் தாய் மற்றும் சகோதரி இருவரும் சேர்ந்து அபிராமிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கூடுதல் வரதட்சணை கேட்டு அபிராமியை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அபிராமி தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கிருந்து அவர் வேலைக்கும் சென்றுவந்துள்ளார். இதையடுத்து, நேற்று வேலைக்குச் சென்ற அபிராமி, ‘உடல் நலம் சரியில்லை வீட்டிற்குச் செல்வதாக’ கூறிவிட்டு கணவர் வீட்டிற்குச் சென்றதாகத் தெரிகிறது.

இந்நிலையில், வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அபிராமி குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனைகேட்டு அபிராமி பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், தனது மகளின் மரணத்திற்கு கணவர் ராகவேந்தர் குடும்பத்தினர் தான் காரணம் எனவும், அபிராமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, அபிராமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது இறப்பிற்குக் கணவரின் தாய் மற்றும் சகோதரி தான் காரணம் எனக்கூறி வெளியிட்ட வீடியோ போலீசாருக்கு கிடைத்துள்ளது. அபிராமி பேசும் வீடியோ தற்போது இணையத்திலும் பரவியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா மருத்துவமனையில் இருதரப்பு குடும்பத்தினர் மற்றும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அபிராமி பேசிய வீடியோ பதிவினை கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் காவல்துறையினர் கணவர், மாமியார், நாத்தானார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..

Fri Jan 27 , 2023
பழம்பெரும் நடிகை ஜமுனா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. பழம்பெரும் நடிகை ஜமுனா 1936-ம் ஆண்டு கர்நாடகாவின் ஹம்பியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜனா பாய். பள்ளியில் படிக்கும் போதே நடிப்பதில் ஆர்வமாக இருந்த ஜமுனா மேடைக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.. பின்னர் தனது தாயின் ஊக்கத்துடன் குரல் இசை மற்றும் ஹார்மோனியம் கற்றுக்கொண்டார். ஜமுனாவின் மேடை நிகழ்ச்சியை பார்த்த, டாக்டர் கரிகிபதி ராஜா […]

You May Like