fbpx

தான் பெற்ற குழந்தைகள் மீதே கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கொடுமைப்படுத்திய கொடூர பெண்…..! எங்கு தெரியுமா……?

குழந்தைகளை எப்போதும் யார் துன்புறுத்தினாலும், குழந்தைகளின் தாய் மட்டும் எப்போதும் குழந்தைகள் துன்பப்பட வேண்டும் என்று நினைக்கவே மாட்டார். தன்னுடைய குழந்தைகளை யாராவது குறை சொன்னாலும் அதனை எந்த தாயும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ள மாட்டார் இதுதான் தாய்மையின் பண்பு.

ஆனால் இதற்கு நேர் எதிர் மாறாக சிங்கப்பூர் நாட்டில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, குற்றம் சுமத்தப்பட்ட அந்தப் பெண் சென்ற வருடம் ஜூலை மாதம் இரண்டாம் தேதி தன்னுடைய நான்கு குழந்தைகள் மீது வெந்நீரை ஊற்றியதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்தப் பெண் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார் என்று சொல்லப்படுகிறது.

தாய் வெந்நீரை கொட்டியதால் குழந்தைகள் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைையின் அடிப்படையில், குழந்தைகளின் உடலில் ஒரு சதவீதம் முதல் 10% வரையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 10 வயது சிறுமியின் இடது கை, வயிறு மற்றும் இரண்டு தொடைகளிலும் மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

குழந்தைகள் தற்போது ஒரு காப்பகத்தின் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு, குழந்தைகளின் தாய் அவர்களை தொடர்பு கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது.

ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு பின் அந்த பெண்ணுக்கு 15000 சிங்கப்பூர் டாலர் அபராதமாக விதித்து ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கு வரும் 22ஆம் தேதி மறுபடியும் விசாரணைக்கு வர உள்ளது. தன்னுடைய பராமரிப்பில் இருக்கின்ற குழந்தையை மிக மோசமாக நடத்திய குற்றத்திற்காக சிங்கப்பூர் நாட்டு சட்டப்படி 8 வருடங்கள் வரை தண்டனை அல்லது 8000 டாலர் வரையில் அபராதம் மிதிக்கப்படலாம். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Post

வருமான வரி செலுத்தி விட்டீர்களா..? குறுஞ்செய்தி ஏதேனும் வந்துருக்கா..? வெளியான மிக முக்கிய எச்சரிக்கை..!!

Wed Aug 2 , 2023
2022-23ம் நிதியாண்டுக்கான வருமான வரியை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, வரி ஏய்ப்பு செய்ய வகையில் போலியான வாடகை ரசீதுகளைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மாத சம்பளம் வாங்குபவர்கள் தவறான வருமான வரி கணக்குகளை சமர்ப்பித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது போலி […]

You May Like