fbpx

’கில்லி’ பட பாணியில் பெண் கேட்ட தாய் – மகன்..!! பிளஸ்1 மாணவியை கட்டாய திருமணம் செய்து கொடுமை..!!

கில்லி பட பாணியில் 11ஆம் வகுப்பு மாணவியை ஊராட்சி தலைவியான தனது தாயுடன் சென்று பெண் கேட்டு மிரட்டி திருமணம் செய்து கொடுமைப்படுத்திய கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டான். 

‘கில்லி’ படத்தில் நாயகி, வீட்டிற்கு தாயுடன் செல்லும் வில்லன் கட்டாயப்படுத்தி திருமண நிச்சயதார்த்தம் செய்வது போன்று காட்சி இடம் பெற்றிருக்கு. இதே போல நிஜத்தில் ஒரு சம்பவம் மதுரையில் அரங்கேறி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவி கோமதி என்பவரது மகனான வெற்றிவேல் தான் இந்த லோ பட்ஜெட் முத்துப்பாண்டி. மதுரையைச் சேர்ந்த 16 வயதான பள்ளி மாணவி ஒருவரை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்குமாறு, சிறுமியின் பெற்றோரை கோமதி மிரட்டியுள்ளார். பின்னர், கடந்த ஆண்டு அந்த மாணவியை தனது மகன் வெற்றி வேலுக்கு அரசனூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

’கில்லி’ பட பாணியில் பெண் கேட்ட தாய் - மகன்..!! பிளஸ்1 மாணவியை கட்டாய திருமணம் செய்து கொடுமை..!!

திருமண செலவுக்கு பணமில்லை என்று திருமணத்தை தவிர்க்க நினைத்த மாணவி குடும்பத்தினரிடம் வீட்டு பத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டு 10 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்து திருமணத்தை விமர்சையாக நடத்தி உள்ளார். திருமணம் முடிந்த சில தினங்களில் வெற்றிவேல் தனது மனைவியுடன் மதுரையில் வீடு எடுத்து தங்கி உள்ளார். அவரது தந்தையும் அவர்களுடன் தங்கி இருந்துள்ளார். தனது கணவன் வெற்றிவேல் கஞ்சா மற்றும் மதுபோதைக்கு அடிமையாக இருப்பதும், அவர் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்றவழக்குகள் இருப்பதும் சிறுமிக்கு தெரியவந்துள்ளது.

’கில்லி’ பட பாணியில் பெண் கேட்ட தாய் - மகன்..!! பிளஸ்1 மாணவியை கட்டாய திருமணம் செய்து கொடுமை..!!

வெற்றிவேல் நாள்தோறும் மது குடித்துவிட்டும் கஞ்சா போதையில் சிறுமியை அடித்து உதைத்து பாலியல் சைக்கோ போல கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அண்மையில் கஞ்சா விற்பனை செய்ததாக கூறி வெற்றிவேலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அமைச்சரின் உறவினர் எனக்கூறி சில தினங்களில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த வெற்றிவேல், கடந்த இரு நாட்களாக அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தியதால், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

’கில்லி’ பட பாணியில் பெண் கேட்ட தாய் - மகன்..!! பிளஸ்1 மாணவியை கட்டாய திருமணம் செய்து கொடுமை..!!

சிறுமியான தனது மகளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததோடு, தற்போது அவரை கொலை செய்து விட்டு, வேறொரு திருமணம் செய்துகொள்ளபோவதாக வெற்றிவேல் மிரட்டி வருவதாக சிறுமியின் தாயார் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில், சிறுமியை வற்புறுத்தி திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேலை தேடி வந்த தல்லாகுளம் போலீசார், அவனை இன்று கைது செய்தனர். மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த வெற்றிவேலை பிடித்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

பனையூரில் சுடச்சுட ரெடியாகும் பிரியாணி..!! விருந்து வைக்கும் விஜய்..!! நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை..!!

Sun Nov 20 , 2022
வாரிசு திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், பனையூரில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் விஜய். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மட்டும் அடையாள அட்டையுடன் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படம், திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கில் ’வாரசுடு’ என்ற டைட்டிலில் ரிலீஸாகும் […]
பனையூரில் சுடச்சுட ரெடியாகும் பிரியாணி..!! விருந்து வைக்கும் விஜய்..!! நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை..!!

You May Like