fbpx

வாகன ஓட்டிகள் நிம்மதி..!! இனி சுங்கச்சாவடிகளே கிடையாது..!! அமைச்சர் எ.வ.வேலு சொன்ன குட் நியூஸ்..!!

நேற்று முன்தினம் தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. முதல் நாள் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். நேற்று முதலமைச்சர் 110 விதியின் கீழ் வரி செலுத்துவது தொடர்பாக சமாதான திட்டத்தை அறிவித்தார். மேலும் 50,000 ரூபாய்க்கு கீழ் வரி நிலுவையில் இருப்பவர்களுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

3-வது நாளான இன்று, சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சாலை மிக குறுகிய சாலைகளாக இருப்பதாகவும், புறவழி சாலை அமைக்க அதிமுக ஆட்சியில் ஆய்வு செய்யப்பட்டது என்றும், பணிகள் தற்போது தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? எனவும் எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, ”கோபிசெட்டிபாளையம் சாலை குறித்து தானும் மிகவும் அறிந்தவன் தான். புறவழி சாலை அமைப்பதற்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மொத்தமாக 8.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்வதற்காக ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

அதேபோல் 4 வழிச்சாலை அமைத்தாலும் மாநில நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைப்பதில்லை என அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டு பேசியுள்ளார். புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல் மாலையீடு வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ஆம்புலன்ஸ்கள் , கல்லூரி பேருந்துகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த சாலையை 4 வழி சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என புதுக்கோட்டை முத்துராஜா கோரிக்கையை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ”7 மீட்டர் கொண்ட மாநில சாலையை 10 மீட்டராக்கி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுகின்றனர். அதில் டோல்கேட் அமைக்கின்றனர். டோல்கேட்கள் கூடாது என மத்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம். முதல்வர் மாநில நெடுஞ்சாலைகள் திட்டத்தின் கீழ் அனைத்து சாலைகளும் 4 வழி சாலையாக்கப்பட்டு வருகின்றன. 4 வழிச்சாலை அமைத்தாலும் மாநில நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைப்பதில்லை” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

அக்டோபர் 25 ஆம் தேதி தமிழகத்தில் இந்த மாவட்டடத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

Wed Oct 11 , 2023
தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது, மேலும் சதய நட்சத்திர நாளான 25ஆம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திஇல் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 25ம் தேதி மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு, தமிழகம் முழுவதில் இருந்து […]

You May Like