fbpx

குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சினிமா தயாரிப்பாளர்..!

தனது தயாரிப்பு நிறுவனத்தில் பனிபுரியும் இளம்பெண்ணை பாலியில் வன்கொடுமை செய்ததாக சினிமா தயாரிப்பாளர் முகமது அலி என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கருக்கலைப்பு செய்ததுடன் 5 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை அடுத்து சினிமா தயாரிப்பாளர் முகமது அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கொளத்தூரை சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான முகமது அலி(வயது 30) கீழ் அயனம்பாக்கத்தில் அவரின் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தை நடத்தி வந்துள்ளார். முகமது அலியின் தயரிப்பு நிறுவன அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் பெரம்பூரை சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் அந்த பெண் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் முகமது அலி மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், முகமது அலிக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து காதலிப்பதாகவும், திருமண செய்து கொள்ள வேண்டும் எனக் கூறி தொல்லை கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல் தான் குடித்த குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்திருந்தார், இதனையடுத்து தான் கர்ப்பமடைந்த நிலையில் சத்து மாத்திரை எனக்கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி கொடுத்து கருவை கலைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தபோது பதிவு செய்த விடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் எனக்கூறி ரூ.5 லட்சம் வரை பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரித்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கீதா, சினிமா தயாரிப்பளரான முகமது அலி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளார். கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் முகமது அலி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Kathir

Next Post

ஸ்தம்பித்த பெங்களூரூ!… 133 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை!... ஒரேநாளில் 111 மி.மீ மழை பதிவு!

Tue Jun 4 , 2024
Bengaluru: கடந்த 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூரில் 111 மிமீ மழை பெய்துள்ளது, இது 133 ஆண்டுகால சாதனையை முறியடித்தது, ஜூன் மாதத்தில் ஒரே நாளில் அதிக மழை பெய்தது என்று வானிலை துறை தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) விஞ்ஞானி புவியரசன் கூறுகையில், 133 ஆண்டுகளில் ஜூன் மாதம் 2-ம் தேதி அதிக மழை பெய்துள்ளது. ஜூன் 1 மற்றும் 2 ஆம் […]

You May Like