இல்லத்தரசிகளுக்கு ஷாக்.. கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு…

சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது..

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றியமைக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை திருத்தப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கு 14.20 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிகப் பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன.

சிலிண்டர்

கடந்த 1-ம் தேதி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைந்தது. அதன்படி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.187 குறைக்கப்பட்டு ரூ.2,186 ஆக குறைந்த.. ஆனால் அன்றைய தினம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.1,018.50-க்கு விற்பனையானது..

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.. அதன்படி சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1,068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.. எனினும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.8.50 குறைந்து ரூ.2,177.50 ஆக விற்பனையாகிறது..

Maha

Next Post

உஹான் இல்ல.. அமெரிக்க ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்தது.. அமெரிக்க நிபுணர் தகவல்...

Wed Jul 6 , 2022
கொரோனா வைரஸ் அமெரிக்க ஆய்வகத்திலிருந்து கசிந்ததாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கூறினார். கொரோனா பரவி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், கோவிட்-19 இன் தோற்றம் தெளிவாக இல்லை. உலகளவில் விஞ்ஞானிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் அரசியல் மற்றும் அறிவியல் விவாதமாக உள்ளது, கொரோனா வைரஸ் வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்று ஒரு தரப்பும் அல்லது ஆய்வகத்திலிருந்து கசிந்தது மற்றொரு தரப்பும் வாதிடுகின்றனர். கடந்த மாதம், உலக சுகாதார அமைப்பின் […]

You May Like